பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை



Author : Robert T. Kiyosaki
Language : Tamil

Total Pages : 240

BUY NOW 100.00

Description


விற்பனையில் மகத்தான சாதனைகளைப்  படைத்துள்ள இப்புத்தகம் -

* ஏராளமாக சம்பாதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும்

* உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள்  கொண்டிருக்கும் நம்பிக்கையைச் என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும் 

* உங்கள் குந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும உதவாது என்பதை உங்களுக்கு எடுட்ததுரைக்கும்

* உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை கடன் பட்டியலின் கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் 

* பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்பஐ உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை ராபர்ட் கியோஸாகி  மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றிக் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் அறிவுரைகளோடு முரண்பட்டு நிற்கின்ற கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள அவர், தன் கருத்துக்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவர். பொருளாதாரக் கல்வி அவசியம் தேவை என்று உணர்வுபூர்வமாக வலியுறுத்தி வருகின்றவர் என்று உலக அளவில் அவர் மதிக்கப்படுகிறார்.

மக்கள் பொருளாதாரரீதியாகப் போராடிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், அவர்கள் பல வருடங்களை ஏட்டுக் கல்வி கற்பதற்காகச் செலவிட்டுள்ள போதிலும், பணத்தைப் பற்றித் துளிகூடக் கற்றுக் கொள்ளாமல் இருந்துவிட்டதுதான். அதன் விளைவாக அவர்கள் பணத்திற்காக வேலை செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்... ஆனால் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்க அவர்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை.

இதுவரை வெளிவந்துள்ள தனிநபர் நிதி நிர்வாகப் புத்தகங்களில் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எனும் இப்புத்தகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தங்களுடைய பொருளாதாரத் தலைவிதியை நிர்ணயிக்கத் தேவையான கட்டுப்பாட்டைக் கைவசப்படுத்திக் கொள்ள விரும்பும் எவரொருவரும் துவக்க வேண்டிய இடம் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எனும் இப்புத்தகம்தான். - யுஏஸ்ஏ டுடே

Post a Comment

0 Comments