இஸ்லாமியக் பார்வையில் நேரம் நிர்வாகம்
Author : M.S. Abdul Hameed
Language : Tamil
Total Pages : 144
Description
இந்த உலகம் நம்மை விட்டு விலகிச் சென்று
கொண்டிருக்கிறது. ஆனால் மறுவுலகம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இரண்டுக்கும்
குழந்தைகள் உண்டு. மறுவுலகத்தின் குழந்தைகளாக இருங்கள். இவ்வுலகத்தின் குழந்தைகளாக
இருக்காதீர்கள். இன்று செயல் மட்டும்தான். கேள்வி இல்லை. நாளை கேள்வி மட்டும்தான்.
செயல் இல்லை. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத் தறுவாயில்தான்
விழித்துக்கொள்கிறார்கள்.
- அலீ இப்னு அபீதாலிப் (ரலி)
நான் சான்றோர்களுடன் கூட இருந்ததில் இரண்டு
விஷயங்க ளைக் கற்றுக்-கொண்டேன். அதில் முக்கியமானது இது-தான்: நேரம் என்பது வாள் போன்றது.
அதனை நீங்கள் வெட்டா விட்டால் அது உங்களை வெட்டி விடும்.
- இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
நான் அந்த முந்தைய சமுதாயத் தினரைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் திர்ஹங்களை விட, தீனார்களை விட நேரத்துக்கு அதிக மதிப்பும், அதிக முக்கியத்துவமும்
கொடுத்த-னர். அதன் விஷயத்தில் மிகுந்த விழிப்பு--ணர்வுடன் இருந்தனர்.
- ஹஸன் அல் பஸரீ (ரஹ்)
காலம் தான் வாழ்க்கை
- இமாம் ஷஹீத்
ஹஸன் அல் பன்னாஹ் (ரஹ்)
Post a Comment
0 Comments